கல்பாதௌ ஹரிணா சுயம் ஜநஹிதம் த்ருஷ்ட்வைவ
சர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வச்ய ச கீர்த்தனம் பிரபதநம் ஸ்வஸ்மை
ப்ரஸூநார்பநம் |
ஸர்வேஷாம் ப்ரகடம் விதாதுமநிஷம் ஸ்ரீதன்விநவ்யே புரே
ஜாதாம் வைதிகவிஷ்ணுசித்த தநயாம்
கோதாமுதாராம்ஸ்தும : ||
சேதனர்கள் ( நம் போன்றார் )உய்வு பெற திருவுள்ளம் பற்றி
3 உபயங்களை வராகப்பெருமான் பூமி பிராட்டியிடம் கூறினார் .
அவையாவன
- திருநாம சங்கீர்த்தனம் வாயாலே பாடுவது ,
- பிரபத்தனம் means மனதாலே எம்பெருமானுடைய திருவடிகளே தஞ்சம்
என்று எண்ணுவது - புஷ்பங்களைக் கொண்டு எம்பெருமானுக்கு அர்ச்சனை பண்ணுவது
அக மனம் மொஹ்லி என்று முக்காரணத்தாலேயும் செய்ய வேண்டிய வியாபாரத்தை பூமி பிராட்டிக்கு எடுத்து உரைத்தார் .
வராகப் பெருமானிடத்தில் சிஷ்யையாகவும் , தாசியாகவும், பக்தையாகவும் இருந்து தான் கேட்ட அர்த்தங்களை தன்னுடைய அனுஷ்டானத்தில் காட்டுவதற்காகவே , ஜாதம் விஷ்ணு சித்தனயம் என்று அந்தணர் குலத்தில் பெரியாழ்வாருக்கு மகளாக அவதரித்தாள் .
என்னைப் பாடினால் மோட்சம் தருவேன் என்று வராகப் பெருமான் சொன்னானம் . அதனால் திருப்பாவையில் 13 பாசுரங்களை எம்பெருமானையே பாடினாள்.
ஐந்தாம் பாசுரத்தில் தூமலர் தூவி தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து என்று காட்டினாள் . நாமும் அவனை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூமலர் தூவி பூஜித்து அவன் அருளையும் ஸ்ரீ ஆண்டாள் அருளையும் பெறுவோம்.